1. கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? அது நாட்களினூடாக, பழங்காலத்திலேயே கேட்கப்பட்டு வரும் கேள்வியாக இருக்கிறது. தொடர்ந்து வருடாவருடங்களாக, இந்த இதே கேள்வி கேட்கப்பட்டே வருகிறது. கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? காலம் முழுவதுமாக, அவர் யாரோ-யார் என்றும், அவர் என்னவாக இருந்தார் என்று வியப்படைந்திருக்கிறார்கள். அவர் தேவகுமாரனாக இருந்தாரா? அவர் எவ்விதம் இருக்க முடிந்தது? கன்னிப்பிறப்பு எவ்விதம்... இருக்க முடிந்தது?" என்ற விவாதமானது அங்குமிங்குமாக வந்திருக்கிறது.
2. என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, அங்கே 70 சதவீதம் புரட்டஸ்டன்ட் பிரசங்கிமார்கள் இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிக்கிறார்கள். அதைக் குறித்து நினைத்துப் பார்த்தீர்களா? சென்ற வருடத்தில் 13 மில்லியன் நாஸ்திகர்கள் நமக்கு பொரித்து வெளிவந்ததில் வியப்பொன்றுமில்லை. பார்த்தீர்களா? ஏனென்றால் கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை பாகமானது இயேசு கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அவர் ஒரு கன்னிப்பிறப்பில் பிறந்திராதிருந்தால், அவர் தேவனுடைய குமாரன் அல்ல. அவர் கன்னிப்பிறப்பில் பிறந்திருந்தால், அவர் தேவனுடைய குமாரனாக இருக்க வேண்டும்; வேறு யாரும் அவரை இங்கே கொண்டு வந்திருக்க முடியாது, ஏனென்றால் அங்கே தேவன் மாத்திரமே சிருஷ்டிகராக இருக்கிறார்.
3. இப்பொழுது, நாம் சற்றுநேரம் வேதவாக்கியங்களுக்குள்ளாக நோக்கிப் பார்ப்போம்.
4. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு - ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் என்னோடு வேட்டையாடுகிற ஒரு வேட்டை கூட்டாளி. வெறுமனே ஒரு சில மணிநேரங்களாகத் தான் அவரை எனக்குத் தெரியும். நான் அவரை மேலே கொலராடோவுக்குப் போகும் பாதையில் சந்தித்திருந்தேன். நான் கடம்பை மான் வேடைக்காக அந்த மலைகளுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன், கொஞ்சம் ஓய்வெடுத்து, திரும்ப இளைப்பாறும்படிக்கு தூரமாகப் போய்க் கொண்டிருந்தேன். அவர் என்னை ஏற்றிக் கொண்டார், நாங்கள் ஒரு குதிரையில் ஏறினோம். அவர், உங்களால் குதிரைச் சவாரி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.
5. நான், "நல்லது, என்னால் - என்னால் கொஞ்சம் தொடர்ந்து வர முடியும்" என்றேன்.
6. அதற்கு அவர், 'நல்லது, மேலே சேணத்தில் குதியுங்கள்" என்றார். மேலும் அவர்... இரண்டு குதிரைகள் இருந்தன, இப்படியாக நாங்கள் நெடுக சவாரி செய்து போய்க் கொண்டிருந்தோம். அவர், "நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.
7. நான், "இந்தியானாவில் மாகாண காட்டிலாகா அதிகாரியாக (Game Warden) இருக்கிறேன்" என்றேன்.
8. அவர், "நல்லது, காட்டிலாகா அதிகாரி எப்பொழுதாகிலும் ஒரு போதுமே இந்த நாட்டில் வரவேற்கப்பட்டதே கிடையாதே" என்றார்.
9. நான், "நல்லது, நான் இந்தியானாவிலிருந்து வருகிறேன். இங்கேயிருக்கும் உங்களுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது அப்படியே இந்தப் பக்கமாக இருக்கிறது, எனவே நான் காணிக்கைகள் எடுக்க வேண்டியிருக்காது. என்னுடைய சபை... நான் ஒரு ஊழியக்காரனாக இருக்கிறேன்" என்றேன்.
10. அவர் என்னை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "நீர் அதற்காக மிகவும் பிரகாசமாக காணப்படுகிறீர்" என்றார்.
11. நான், "நல்லது, நான்-நான்... எனது சகோதரனே, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுவதல்ல, ஆனால் நான் அதை விசுவாசியாதிருந்தால், நான் பிரகாசமாக இருந்திருக்க மாட்டேன் என்பது போன்று நான் -நான் உணருகிறேன்" என்றேன்.
12. எனவே அவர், "நல்லது, நான் -நான் -நான் சற்றுநேரம் உம்மோடு பேச விரும்புகிறேன்" என்றார்.
13. நான், "இப்பொழுது, நான் தர்க்கம் செய்ய மாட்டேன்" என்றேன், ஏனென்றால் வேதவாக்கியங்கள் தர்க்கம் பண்ணுவதற்கல்ல, அவைகள் ஜீவிக்க வேண்டியே இருக்கின்றன. அது - அது, நீங்கள் ஒரு பிரசங்கமாக வாழுகிறீர்கள். அதுதான் மிகச்சிறந்த காரியம். ஒரு பிரசங்கம் பண்ணுவதைக் கேட்பதைக் காட்டிலும், அதன்படி ஜீவிப்பதைக் காணவே அதிகம் விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறு இல்லையா? ஒரு பிரசங்கமாக ஜீவியுங்கள். "நீங்கள் சகல மனுஷராலும் வாசிக்கப்படுகிற எழுதப்பட்ட நிருபங்களாக இருக்கிறீர்களே."
14. அவர், "நல்லது, அந்தக் கன்னிப்பிறப்பைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? அது உண்மை என்று நீர் விசுவாசிக்கிறீரா?" என்று கேட்டார்.
15. அதற்கு நான், "அது சத்தியம் என்று நான் அறிவேன்" என்றேன்.
16. அவர், "ஓ, நீர் அப்படியே தவறாக இருக்கிறீர். அங்கே - அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியம் சம்பவிக்கவே முடியாது" என்றார்.
17. நான், "ஆனால் அங்கே அது இருந்தது என்றேன்.
18. அவர், "நல்லது, நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, நான் முதலில் உம்மிடம் இதைக் கூற விரும்புகிறேன், நான் அதை நம்புவதில்லை. உம்முடைய இருதயத்தின் அடியில், நீர் அதை விசுவாசிக்கவில்லை என்றே நான் - நான் உண்மையில் நினைக்கிறேன் என்றார்.
19. நான், ஆனால் என்னுடைய இருதயத்தில், நான் என்னுடைய இருதயத்தை அறிந்திருந்தால், நான் அதை விசுவாசிக்கிறேன் என்றேன்.
20. அவர் சொன்னார் - அவர், "சரி, கன்னிப்பிறப்பு சாத்தியமே கிடையாது என்று என்னால் விஞ்ஞானப்பூர்வமாக உமக்கு நிரூபிக்க முடியும்" என்றார்.
21. நான், "எனக்கும் விஞ்ஞானத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள்.... தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்டென்று விசுவாசித்தாக வேண்டும், அவர் இருக்கிறார் என்று நிரூபித்துக் காட்டுவது அல்ல, ஆனால் அவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பதே" என்றேன்.
22. இப்படியாக அவர், "நல்லது, பாரும், விஞ்ஞானத்தின் மூலமாக நிரூபிக்க முடியாத எதுவும் உண்மையானதல்ல" என்றார்.
23. நான், "ஓ, என்னே. நான் அங்கே உம்மோடு கூட நிச்சயமாகவே இணங்காதிருக்கப் போகிறேன். அங்கேயிருக்கும் ஒரே உண்மையான காரியம் என்னவென்றால், விஞ்ஞானம் அதைக் குறித்து எதையுமே அறிந்திராதவைகள் தான்" என்றேன்.
24. அவர், "ஓ, என்னே. நாம் உண்மையாகவே தனியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோம், இல்லையா?" என்றார்.
25. நான், "ஆம், ஐயா" என்றேன்.
26. அவர், "நல்லது, இதோ பாரும்... என்றார்.
27. நான், "நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன்: நீர் உம்முடைய மனைவியை நேசிக்கிறீரா?" என்று கேட்டேன்.
28. அவர், "ஆம், ஐயா" என்றார்.
29. நான், 'அன்பு என்றால் என்னவென்று விஞ்ஞானப்பூர்வமாக எனக்குக் காண்பியும். அந்தப் பாகத்தை உற்பத்தி செய்து, நான் அதை உணர்ந்து, அது என்னவென்று பார்க்கட்டும். உம்முடைய எந்தப் பாகம் உம்முடைய மனைவியை நேசிக்கும்படியாக ஒரு அன்பாக இருக்கிறது, உம்முடைய எந்தப் பாகம் மற்ற எந்தப் பெண்ணிலிருந்தும் அவளை வித்தியாசமாகச் செய்கிறது?" என்று கேட்டேன். அங்கேதான் காரியம். பாருங்கள்? நான், ஆளுமையை (personality) நீர் நம்புகிறீரா?" என்றேன்.
30. அவரும், "ஆம்" என்றார்.
31. நான், "ஒரு மனிதனில் எது ஆளுமை என்று விஞ்ஞானப்பூர்வமாக எனக்குக் காண்பியும். அதைச் செய்ய முடியாது. ஆளுமை, அன்பு, அந்தக் காரியங்கள், தேவன், கிறிஸ்து, பரிசுத்த ஆவி, தூதர்கள், உண்மையான அந்தக் காரியங்கள் எல்லாம், விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியாத, அவ்வாறு செய்யக்கூடாத காரியங்களாக இருக்கின்றன. தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அவர் அவனை முதலில் தம்முடைய சொந்த சாயலாக உண்டாக்கினார், அது ஒரு ஆவியாக இருந்தது. அதன்பிறகு அவர் மனிதனை ஐந்து புலன்களில் வைத்தார், அவரை அறிவிக்க அல்ல, ஆனால் அவனுடைய பூமிக்குரிய வீட்டோடு தொடர்புகொள்ளவே. ஒரு மனிதனுடைய விஞ்ஞானப்பூர்வமான பாகம், பார்த்தல், ருசித்தல், உணருதல், நுகருதல், மற்றும் கேட்டல் ஆகியவை அவனுடைய பூமிக்குரிய வீட்டோடு தொடர்பு கொள்வதற்கு மாத்திரமே. ஆவியாக இருக்கும் உள்ளான மனுஷன் தான் தேவனோடு தொடர்புகொள்கிறான். அதைக் குறித்து விஞ்ஞானத்திற்கு எதுவும் தெரியாது" என்றேன். அவர்கள் முதல் வருடத்தில் காரியங்களை உருவாக்குகிறார்கள், அவர்கள் அதை மறுபடியுமாக மாற்றி, இடித்துத் தரைமாட்டமாக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையோ உருவாக்கிவிட்டு என்றென்றுமாக நிலைநாட்டப்பட்டு விடுகிறது, அது ஒருபோதும் மாறுவதே கிடையாது, அது என்றென்றுமாக தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது.
32. இப்பொழுது, அவர், ஏன், கவனியும், அந்தக் கன்னிப் பிறப்பு, அது சத்தியம் என்று நீர் உண்மையாகவே நம்புகிறீரா?" என்று கேட்டார்.
33. நான், ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றேன்.
34. அவர், "பிரசங்கியாரே, அது எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் விரோதமாக இருக்கிறதே, அந்தக் கன்னிப்பிறப்பு. அது அவ்வாறு இருக்க முடியாது, சோளம், சோளமானது இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைவிடுவதற்காக உச்சியை வெட்ட (poll) வேண்டியிருக்கிறது; கிளைவிடுவதற்காக மரங்களின் உச்சியையும் வெட்ட வேண்டியிருக்கிறது; எல்லாவற்றிற்குமே; மகரந்தப்பொடி ஒன்றிலிருந்து வேறொன்றிற்குப் போக வேண்டியிருக்கிறது, மரங்களிலும் மற்ற எல்லாவற்றிலும் கூட ஆணிலிருந்து பெண்ணிற்குப் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அது விளைச்சலை உண்டுபண்ணாது (bear)" என்றார்.
35. நான், ஆனால் ஐயா, அவர் சிருஷ்டிகராகிய தேவன் என்பதை மறந்துவிட்டீர்கள் என்றேன்...
36. அவர், "நல்லது, அது அவ்வண்ண ம் இருக்கவே முடியாது, ஐயா" என்றார்.
37. நான், நல்லது, நான் உம்முடைய மன்னிப்பைக் கோருகிறேன், அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. முட்டை கலப்புணவு (pudding) புட்டு என்பதற்கான நிரூபணம் என்னவென்றால், அதை சாப்பிடுவது தான்.' அது அவ்வண்ணம் இருந்தது" என்றேன்.
38. அவர், "நல்லது, இப்பொழுது, இதோ பாரும், அது கொஞ்சம் மடத்தனமான தவறு என்று நீர் நம்பவில்லையா, யோசேப்பு தான் உண்மையாகவே தகப்பனாக இருந்தார்..." என்றார்.
39. நான், "இல்லை, ஐயா! அது தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன், நான் கொண்டிருப்பதைக் காட்டிலும் யோசேப்புக்கு அதனேடு கூடுதலாக எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தது என்றேன். அது சரியே. நான், அது தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்றேன். மேலும் அவர்... அது தேவனுடைய குமாரனாக இருந்தது.
40. அதற்கு அவர், "நல்லது, இதோ பாரும், நான் உமக்குச் சொல்லுகிறேன், அது - அது இருக்கிறது, அது சற்றே அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை என்று நான் நம்புகிறேன்" என்றார்.
41. நான், "நான் ஒரு காரியத்தை உமக்குச் சொல்லட்டும். அவர் உண்மையிலேயே ஒரு பூமிக்குரிய தாயைக் கொண்டிருந்தார் என்று நம்புகிறீரா?" என்று கேட்டேன்.
42. அவர், "ஆமாம், மரியாள் அவருடைய தாய் என்று நான் நம்புகிறேன், ஆனால் யோசேப்பு தான் அவருடைய தகப்பனாக இருந்தார்" என்றார்.
43. நான், அப்படியானால் இங்கே பூமியில், பூமிக்குரிய துணையை அறியாமல் ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பது என்பது ஒரு பெண்ணிற்கு சாத்தியமில்லை என்று சொல்லுகிறீர்" என்றேன்.
44. ஆம், ஐயா. அது முற்றிலும் சரியே" என்றார்.
45. நான், "அப்படியானால் நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீர் கேட்பீரானால்... இதற்குப் பதில் சொல்லும், அப்படியானால் நான் உம்மோடு இணங்கப் போகிறேன். நீர் என்னிடம் கூறுவீரானால்..." என்றேன். முதலாவது மனிதன் ஒரு - ஒரு தலைப்பிரட்டையிலிருந்து வந்ததாக அவர் என்னிடம் கூறினார், உங்களுக்குத் தெரியும், அல்லது ஒரு நட்சத்திரத்திலிருந்தோ அல்லது ஏதோவொன்றிலிருந்தோ ஒரு துண்டாக வந்தது என்று அவர் என்னிடம் கூறினார். நான், "நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். ஆணிடமிருந்து ஒரு உண்மையான தொடர்பு இல்லாமல் இங்கே பூமியின் மேல் ஒரு குழந்தை பிறக்க முடியாது என்று நீர் என்னிடம் கூறுவீரானால், நான் உம்மிடம் இதைக் கேட்க விரும்புகிறேன்: 'முதல் மனிதன் எங்கிருந்து வந்தான்? அவனுடைய தகப்பனும் அவனுடைய தாயும் யாராக இருந்தனர்?' என்று கேட்டேன். அவன் தலைப்பிரட்டையாகவோ (tadpole), குரங்காகவோ, அவன் என்னவாகிலும் இருக்கட்டும், உம்முடைய போதனையின்படி, அவனுக்கு ஏதோவொரு இடத்தில் அப்பாவும் அம்மாவும் இருந்திருக்க வேண்டுமே" என்றேன். அது சரியே. அவனுடைய அப்பாவும் அம்மாவும் யார்?"
46. அவர் இவ்வளவு காலஞ் சென்றும் ஒருபோதும் எனக்குப் பதிலளிக்கவேயில்லை. இல்லை, ஐயா. அவரால் பதிலளிக்க முடியாது. இல்லை , ஐயா. அவன் யாராகவும் இருக்கட்டும், அவன் பூச்சியாகவோ, தவளைக்குஞ்சாகவோ (polliwog), ஜெல்லிமீனாகவோ, அவன் யாராக இருந்தாலும், அவர்களுடைய பேச்சின்படி, அவனுக்கு எங்கோ ஒரு அப்பாவும் அம்மாவும் இருந்திருக்க வேண்டும்.
47. அவர் யேகோவாவால் உருவாக்கப்பட்டு கன்னிப்பிறப்பால் பிறந்த தேவனுடைய குமாரனாக இருந்தார். தேவன் ஒரு ஆவியாக இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்: அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும். அதைக்குறித்த சத்தியத்தைக் கேட்டு, பிறகு ஆவிக்குள்ளாக அவரைத் தொழுதுகொள்ளுங்கள். இப்பொழுது, இதுதான் நான் விசுவாசிப்பது. அந்தக் கன்னி மரியாள் வெறுமனே ஒரு சிறு பெண்பிள்ளையாகவே இருந்தாள், அவளுக்கு பதினேழு, பதினெட்டு வயதாக இருந்தது, அவள் யோசேப்பு என்ற ஒரு மனிதனோடு சென்றாள். சிருஷ்டிகராகிய தேவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக அந்தச் சிறு பெண்பிள்ளையின் மேல் நிழலிட்டு, அவள் கற்பந்தரித்து, ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்று நான் விசுவாசிக்கிறேன்: அவர் தான் கிறிஸ்து இயேசு. அந்தக் குழந்தை, இரத்த அணுவானது ஆணிடமிருந்தே வருகிறது என்று நாம் அறிவோம். பெண்ணுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அவள் ஒரு அடைகாக்கும் கருவி மாத்திரமே.
48. பாருங்கள், நீங்கள்... எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பெட்டைக்கோழியானது.... ஒரு பெட்டைக்கோழி ஒரு முட்டையை இடலாம், அந்தப் பெட்டைக் கோழியானது சேவல்கோழியோடு இருந்திராவிட்டால், அது ஒருபோதும் குஞ்சு பொரிக்காது. அது செழிப்பானதாக இல்லை. ஒரு தாய் பறவை ஒரு கூடு கட்டி, கூடு நிறைய முட்டைகளை இட்டு, அவள் அப்படியே அவைகளை அடைகாக்கலாம் (hover), அவைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, நெருக்கி அழுத்தி, அங்கே அவைகளின் மேல் அமர்ந்துகொண்டு, அவளால் அந்தக் கூட்டை விட்டு போக முடியாமல் மிகவும் பரிதாபகரமாக ஆகும் அளவுக்கு அவள் பட்டினி கிடக்கலாம். அது சரியே. அந்த முட்டைகளை அடைகாத்து, அவைகளை வெது வெதுப்பாக வைத்திருக்கலாம், ஆனால் அவள் ஆண் பறவையோடு இருந்திராவிட்டால், அந்த முட்டைகள் சரியாக அங்கே அந்த கூட்டிலேயே கிடந்து, கெட்டுப் போய்விடும்; அவைகள் ஒருபோதும் குஞ்சு பொரிக்கவே பொரிக்காது. அது சரியே.
49. இந்த ஏராளமான பழைய, குளிர்ந்து போன, சடங்காசாரமான சபைகளைக் குறித்து நான் நினைப்பது அதுதான்: கூடு நிறைய அழுகிய முட்டைகள். நீங்கள் அவர்களை இறுகத்தழுவிக் கொள்ளலாம், அவைகளை சுற்றி சூழ்ந்து அழுத்தி நெருக்கலாம். அவர்கள் பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொண்டு, மறுபடியும் பிறந்திருக்கவில்லை, உங்களுக்கு கூடு நிறைய கெட்டுப்போன முட்டைகள் தான் உள்ளன. அவர்கள் விசுவாசிக்கவோ, அல்லது மற்ற எதையுமே செய்ய மாட்டார்கள், அதை அப்படியே வீசி எறிந்துவிட்டு, மறுபடியுமாக கூட்டைத் தொடங்கி விடுவதுதான் நல்லது. அது சரியே. மறுபடியும் பிறந்து, தாங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிற ஜனங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் ஒரு டீக்கனாகவோ, பிரசங்கியாகவோ, அல்லது அவர் என்னவாக இருந்தாலும் காரியமில்லை. ஆமென்.
50. பயப்படாதீர்கள். இப்பொழுது, நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அறிவேன். இது -இது.... நான் உணர்ச்சி வசப்படவில்லை. நான் -நான் அப்படியே கர்த்தரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? [சபையார், "ஆமென்" என்கின்றனர்.) நிச்சயமாக, நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்கள். சரி. இப்பொழுது, அது உண்மையாக இருக்கிறது.
51. அதன்பிறகு பரிசுத்த ஆவியானவர், சிருஷ்டிகராகிய தேவன், அந்தச் சிறு கன்னிகையாகிய மரியாளின் மேல் நிழலிட்டு, அவளுடைய கர்பத்தில், ஜீவனுள்ள தேவனுடைய குமாரனை உற்பத்தி செய்யும் ஒரு இரத்த உயிரணுவை சிருஷ்டித்தார். மனிதனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அங்கே தான் உங்களுக்கு அவசியமானது இருக்கிறது. அங்கே உள்ளே அவள் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவர் தம்முடைய பிதாவின் இரத்தமாக இருந்தார். அதுதான் சிருஷ்டிக்கப்பட்டது, இனச்சேர்க்கை விருப்பம் அல்ல, ஆனால் சிருஷ்டிக்கப்பட்டது. யேகோவா தேவன் அதைச் சிருஷ்டித்தார். நாமோ இனச்சேர்க்கை விருப்பத்தினால் பிறக்கிறோம். பாவிக்கும் தேவனுக்கும் இடையில் நிற்கும்படியாக, பாவிக்கு ஒரு வழியை ஏற்படுத்தும்படியாக, அதைக் கொடுப்பதின் மூலமாக, அவருடைய இரதத்தின் வழியாக ஒரு பரிசுத்த மனிதனை உருவாக்கும்படி, அவர் அந்த விலையேறப்பெற்ற, பரிசுத்த இரத்தத்தை கல்வாரி சிலுவையில் இலவசமாக சிந்தினார். அல்லேலூயா!
52. இந்தப் பிற்பகலில், வியாதியஸ்தரைச் சுகப்படுத்தி, பாவியை சுத்திகரித்து, அவனைப் புது சிருஷ்டியாக ஆக்குகிற இரத்தம் அதுதான். அந்த அந்த இரத்தத்தின் மூலமாக மாத்திரமே, அது மட்டுமே, அந்தக் காரணத்தினால் தான், நாம் அதை விசுவாசிப்பதின் நிமித்தமாக, நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு, விசுவாசத்தில் நம்மால் நிற்க முடிகிறது. அதன் தன்மைகள் நம்மை ஒரு பாவ ஜீவியத்திலிருந்து சுத்திகரித்து, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்குகிறது. பிசாசுகள் அலறிக் கூச்சலிட்டு வெளியேறுகின்றன; முடவர்கள் நடக்கிறார்கள்; குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; பாவ பாரத்தை சுமக்கிற பாவிகள் சமுதாயத்தில் சீமாட்டிகளாகவும் நற்குடி பெருமகன்களாகவும் ஆகிறார்கள். ஆமென். அங்கே தான் காரியம். அவர் அவருடைய குமாரன் தான், அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். ஆமென். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்.
53. தேவன் ஒரு ஆவியாக இருக்கிறார், ஒரு மனிதன் அல்ல. அவர் ஒரு மனிதனாக இருந்து, இனச்சேர்க்கை விருப்பத்தினால் கிறிஸ்து பிறந்திருப்பாரானால். அவர் ஒரு மனிதன் அல்ல. அவர் ஒரு ஆவியாக இருக்கிறார், அவர் கன்னிமரியாளின் மேல் நிழலிட்டு, ஒரு சிருஷ்டிக்கும் வல்லமையின் மூலமாக குமாரனைப் பிறப்பித்தார், அவர் தான் யேகோவா தேவன். ஆமென். அப்படியானால் அந்த இரத்தம் கலப்படமற்றது, அது இந்தப் பிற்பகலில் என்னுடைய இடத்திலும், உங்களுடைய இடத்திலும் பதில் கூறுகிறது.
54. இருக்கக்கூடியதிலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் காங்கிரஸ்காரர் உப்சாவுக்கு சிகிச்சை அளித்த போது, சக்கர நாற்காலி நோயாளிகள், மற்ற எல்லாமும், எல்லாமே தோல்வியடைந்த போது, அவருடைய வாலிப பிராயத்து எலும்புகள் ஒன்றோடொன்று பொருந்துவது போன்று காணப்பட்டது, அவர் ஒரு வாலிபராக இருந்தபோது, எல்லாமே சரியாக இருந்திருக்கும். ஆனால், அவர் வயது சென்றவராக ஆகும் மட்டுமாக, தேவன் அவரை ஜீவிக்க வைத்தார், அவருடைய வயதான - வயதான எலும்புகள் சுலபமாய் முறியக்கூடியதாகவும், மற்ற எல்லாமாகவும் இருந்தன, அதன்பிறகு கலப்படமற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது அவருடைய சுகத்திற்காக கல்வாரியில் பதிலளித்தது. இதோ அவர் இன்றைக்கு ஒரு புதிய மனிதனைப் போன்று இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம்! தேவ குமாரன்! அவர் அவ்வாறு இருக்கிறார் என்று தான் நான் விசுவாசிக்கிறேன்.
56. ஓ, நம்மால் எப்படியாக தொடர்ந்து பேசிக்கொண்டே போக முடியும். அவர் யார் - என்னவாக இருக்கிறார் என்று காலங்கள் மாத்திரமே கூறும், அவர் என்னவாயிருக்கிறார் என்றும், அவர் யார் என்றும் காலங்கள் மட்டுமே விளக்கிக்கூற முடியும்.
57. ஒரு சில நிமிடங்களுக்கு கேள்வி கேட்கும்படியாக (questioneers) நாம் சிலரை அழைப்போம்.
58. நாம் அவருடைய சத்துருக்களில் சிலரிடம் கேட்போம், யாருக்காவது தெரிந்தால், நாம் அவருடைய சத்துருக்களில் சிலரைப் பார்த்து, அவர்கள் என்ன சாட்சி கூறுகிறார்கள் என்று காண்போம்.
59. முதலில், நாம் அவருடைய நண்பர்களில் சிலரிடம் கேட்டுப்பார்ப்போம். நாம் திரும்பிச்சென்று, முதலாவது மனிதனிடம் கேட்கலாம், இந்தப் பிற்பகலில், சாட்சி சொல்லும்படியாக நம்மால் அவனை அழைத்து, ஆதாமே, ஒரு நிமிடம் இங்கே வா. நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். அது யாருடைய குமாரன்? கன்னிப்பிறப்பைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் உலகமானது அதிகம் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தை யாராக இருந்தது? அவர் யார்?" என்று கூற முடியுமானால்.
60. ஆதாம், அவர் சர்ப்பத்தின் தலையை இடித்து நசுக்க வேண்டியிருந்த ஸ்திரீயின் வித்து" என்று சொல்லியிருப்பபான். வேதாகமத்தில் அவன் பதிலளித்த அதே பதிலையே அவன் கொடுத்திருப்பான் என்று நான் நம்புகிறேன்.
61. ஆதாமே, அவரைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?"
62. நான் அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயிடம், "மோசே, நீ அவரைக் குறித்து, இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டிருந்தால்.
63. அவன் என்ன சொல்லியிருப்பான் என்று உங்களுக்குத் தெரியுமா? மோசே, "உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்; ஜனங்கள் அவரை விசுவாசியாவிட்டால், அவர்கள் அறுப்புண்டு போகப்படுவார்கள்' என்று நான் அதைக் குறித்து, உரைத்திருந்தேனே, அந்த ஒருவர் அவர் தான். நான் அவரைக் குறித்து அவ்விதமாகத்தான் நினைக்கிறேன்" என்று சொல்லியிருப்பான். சரி.
64. நாம் கேட்டிருப்போம்..... நாம் போய் எசேக்கியேலைக் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு மகத்தான தீர்க்கதரிசியாக இருந்தான். "எசேக்கியேலே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
65. அவன், "நான் அவரைக் கண்டேன், ஒரு சக்கரத்தின் நடுவிலுள்ள ஒரு சக்கரத்தைப் போன்று அவர் காணப்பட்டார், அது மேலே ஆகாயத்தின் மத்தியில் தோன்றியது" என்றான்.
66. "தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
67. "எபிரெய புத்திரர்களே, நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?"
68. அதற்கு அவர்கள், ஒருநாள், கீழே பாபிலோனில், நாங்கள் அங்கே சிறைப்பிடிக்கப்பட்டிருந்தோம், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு உருவச்சிலையை பணிந்துகொள்ளாதவன் எவனோ , அவன் அக்கினிச்சூளையில் போடப்படுவான் என்ற ஒரு அதிகாரப்பூர்வ பிரகடனம் அங்கே பரப்பப்பட்டது. நாங்கள் எங்களைத் தீட்டுப்படுத்த மாட்டோம் என்று தானியேலோடு கூட நாங்கள் எங்கள் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டோம். எனவே அந்த நேரம் வந்தபோது, ஊதுகுழல்கள் ஊதப்பட்டது, இசை இசைக்கப்படத் தொடங்கிவிட்டது, நாங்களோ தேவனைச் சேவிக்கும்படியாக, அந்தச் சொரூபத்திற்கு எங்கள் முதுகைத் திருப்பிவிட்டோம். ஒருநாள் அவர்கள் அந்தச் சூளையை, அது எப்பொழுதும் சூடாக்கப்பட்டதைக் காட்டிலும், ஏழு மடங்கு சூடாக்கினார்கள். அவர்கள் எங்களை நகரக்கூடிய சாய்மேடை மரப்பலகையின் (gangplank) மேல் நடக்க வைத்தார்கள்" என்று கூறியிருப்பான். நாம் சற்றுநேரம் அதைப் பார்ப்போம்.
69. என்னே, நீங்கள் அதைக்குறித்து பேசும் போது, நீங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், அவருடைய இரத்தம் மற்றும் அவருடைய வல்லமையைக் குறித்தும் எப்போதெல்லாம் பேசுகிறீர்களோ, பிசாசு அப்போதே உஷ்ணத்தை உங்கள் மேல் திருப்பிவிடுகிறான். நீங்கள் கவனிக்கப்படாமல் கடந்து போய்விடலாம் என்று நினைத்து விடாதீர்கள். பரிசைப் பெற்றிட மற்றவர் கடும் போரிட்டு, இரத்தக் கடல்களின் வழியாக பயணம் செய்திருக்கும் போது, ஓர் இலகுவான பூப்படுக்கையின் மேல், நான் பரலோக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமோ? இல்லை, நான் அரசாள வேண்டுமானால், சண்டையிட்டாக வேண்டும், என் தைரியத்தை அதிகரியும், கர்த்தாவே.
70. நேபுகாத்நேச்சார் இராஜா, "இங்கே கீழே நம்மிடம் இருந்து, பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த பரிசுத்த உருளையர்கள் எல்லாரையும் நாம் அகற்றி விடுவோம். நாம் அதை அவர்களை விட்டு சுட்டெரித்து விடுவோம்" என்று கூறின போது, அந்தக் காலையில், அங்கே கீழே அவர்களை என்னால் காண முடிகிறது. ஒரு அக்கினி அக்கினியை சுட்டெரித்துப் போடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நல்லது, உங்களால் ஒரு மனிதனை விட்டு பரிசுத்த ஆவியை சுட்டெரித்துப் போட முடியாது. அதுதானே அக்கினியாக இருக்கிறது. சரி. அவர்கள் சூளையை சூடாக்குவதை என்னால் காண முடிகிறது, வானம் இருண்டு காணப்பட்டது, அது எப்பொழுதும் சூடாக்கப்பட்டதைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம் சூடாக்கப்பட்டது, நேபுகாத்நேச்சார் இராஜா ஒரு இருக்கையைப் பெற்று, என்ன சம்பவிக்கும் என்று பார்க்கும்படி கவனித்தான்.
72. அந்த கடுஞ்சோதனையான வேளை வருகிறது, அவர்களுடைய கைகள் அவர்களுக்குப் பின்னால் கட்டப்பட்டு, அந்தச் சூளைக்குள் விழும் இடம் வரையில் மரணத்தை நோக்கி நடைபோட்டார்கள் (death march).
73. சாத்ராக் மேஷாக்கிடம், "கவனி, சகோதரனே, நீ முழுவதுமாக ஜெபித்து முடித்து விட்டாயா?" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
74. "ஆமாம்! நான் சரியாக இருக்கிறேன்."
75. அவர்கள், "பையன்களே, சமரசம் செய்துகொள்ள நீங்கள் ஆயத்தாயிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
76. அவனோ, "எங்கள் தேவன் இந்த அக்கினிச்சூளையிலிருந்து எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், ஆனாலும் நாங்கள் உம்முடைய சிலையைப் பணிந்து கொள்ள மாட்டோம்" என்றான்.
77. நியூயார்க்கில், தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, அங்கேயே நிற்க விருப்பமாயுள்ள அந்தவிதமான இன்னும் கொஞ்சம் அதிக ஜனங்களை தேவன் நமக்குத் தருவாராக, நியூயார்க்கில் மட்டுமல்ல, ஆனால் எல்லாவிடங்களிலும், அவர்களை தேவன் நமக்கு தருவாராக. வந்தாலும், போனாலும், என்னவாக இருந்தாலும், கிறிஸ்துவோடு கூட நிற்கிறவர்கள். சரி. அவர் ஒருக்கால் தாமதமாகலாம், அவர் ஒருவேளை இதுவாகவும், அதுவாகவும், மற்றதாகவும் இருக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம், அவர் சரியாக அங்கே இருப்பார்.
78. அதன்பிறகு அவர்கள் மேலே போய்க் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அவர்கள் மயக்கமாகவும் மோசமாகவும் ஆகத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஈட்டிகளோடு கூட வந்த அம்மனிதர்கள் அவர்களை தள்ளிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய.....
79. நாம் சற்று நேரம் இங்கே ஒரு சிறிய நாடகத்தில் பார்ப்போம். அதுதான் அந்தப் பரிசுத்த உருளையர்களுக்கு நடக்கும்... கொண்டு காண முடியாத தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று தங்களைத் தாங்களோ அழைத்துக்கொள்கிற அந்த ஜனங்களுக்கு அதுதான் நடக்கிறது" என்று கூறிக்கொண்டு, அங்கே பின்னால், பின்னால் நின்று கொண்டிருந்த அந்த ஜனங்களில் பாருங்கள். அவர்கள் சேவிக்கிற, அந்தச் சிலையை விரும்புகிறவர்கள், அதுவே அவர்களைக் கொன்று போடும்" என்றார்கள்.
80. அவர்கள் மேலே நடந்து போகையில், அவர்கள் மரணத்திற்கேதுவான ஒருவித உளச்சோர்வை அடைவதை என்னால் காண முடிகிறது, ஆனால் தேவனால் கூடும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள், இருப்பினும், அவர்கள் பணிந்துகொள்ளப் போவதில்லை. அதன்பிறகு , சற்றேறக்குறைய இரண்டு அடிகள் தான் மீதமிருந்தது, அவர்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன், அதோ அவர்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களை முன்னால் நெருக்கித் தள்ளிக்கொண்டிருந்த அம்மனிதர்கள் மூர்ச்சை அடையத் தொடங்கினார்கள். அது ஒரு விசுவாசிக்கு மிகவும் இருளான காட்சியைப் போன்று தோன்றினது, இல்லையா?
81. நாம் நம்முடைய புகைப்பட கருவியை ஒரு சில நிமிடங்கள் திருப்புவோம். நாம் மேலே மகிமையை நோக்கிப் பார்ப்போம். இங்கே கீழே ஏதாவது நடந்து கொண்டிருக்கும் எல்லா நேரமும், அங்கே மேலேயும் ஏதோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்போதுமே. அவர் அங்கே தம்முடைய ஆசாரிய வஸ்திரத்தை உடையவராக வீற்றிருப்பதை என்னால் காண முடிகிறது. என்னே, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவருடைய வலப்பக்கத்தில் ஒரு மகத்தான தூதன் வருவதைக் காண்கிறேன், அவனுடைய பெயர் காபிரியேல். பரலோகம் தூதர்களால் நிரம்பியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? காபிரியேல் அங்கே மேலே ஓடிவந்து, தன்னுடைய பட்டயத்தை உருவி, "எஜமானரே, நீர் என்னை சிருஷ்டித்த நாள் முதற்கொண்டு நான் உம்மைச் சேவித்து வருகிறேன். நான் மின்னல்களை என்னுடைய கரத்தில் பிடித்திருந்தேன். அங்கே கீழே பாபிலோனில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாரும். மூன்று விசுவாசிகளை அவர்கள் சுட்டெரிக்கப் போகிறார்கள். நான் இந்தக் காலையில், அங்கே கீழே இறங்கிப் போகட்டும். ரொட்டியின் எந்தப் பக்கத்தின் மேல் வெண்ணெய் இருக்கிறது என்பதை நான் பாபிலோனுக்குக் காட்டுகிறேன்" என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்களும் விசுவாசிக்கவில்லையா? அவன், "நான் அங்கே கீழே போகட்டும். நான் இந்தக் காலையில், பாபிலோனை துடைத்து துப்புரவாக்கிப் போடுகிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
82. அவரோ, ஆமாம், காபிரியேலே, நீ ஒரு நீதியுள்ள தூதனாக இருந்து வருகிறாய். நான் உன்னை சிருஷ்டித்த நாள் முதற்கொண்டு நீ எனக்கு கீழ்ப்படிந்து வந்திருக்கிறாய், ஆனால் நான் உன்னைப் போகவிட முடியாது" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அப்போது அவன் தன்னுடைய பட்டயத்தை உறையில் போட்டுவிட்டு, அவனுடைய பக்கத்தில், திரும்ப அட்டென்சன் நிலையில் நிற்பதைக் காண்கிறேன்.
83. மேலே, இந்தப் பக்கத்தில், வேறொரு தூதன் வருகிறான், அவன்தான் எட்டி (Wormwood), அவன் தண்ணீரின் மேல் அதிகாரம் உடையவனாயிருந்தான், அவன், ஏஜமானரே, கீழே பாபிலோனில் நீர் கண்டீரா? ஏன், ஜலப்பிரளய காலத்திற்கு முந்தைய (உலகத்தை அழிக்கும்படியாக, நீர் எனக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர். நான் ஆழத்தின் நீரூற்றுகளை உடைத்து, வானத்திலிருந்து தண்ணீரை பொழியச் செய்து, பூமியைக் கழுவி சுத்தமாக்கி விட்டேன். இந்தக் காலையில், நான் அங்கே கீழே போகட்டும். நான் பாபிலோனை பூமியின் பரப்பை விட்டு கழுவி துடைத்துப் போடுகிறேன்" என்று கூறுகிறான். அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
84. அவர், "எட்டியே, நீ ஒரு நல்ல தூதனாக இருந்து வருகிறாய். ஜலப்பிரயத்துக்கு முன்னிருந்த உலகத்தை அழிக்கும்படி நான் உன்னிடம் கூறினதை நீ செய்தாய். நீ பூமியின் மேலுள்ளவற்றை அகற்றிப்போட்டு, நோவாவைக் காப்பாற்றினாய், ஆனால் உன்னைப் போகவிட என்னால் முடியாது" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
85. "நீர் அவர்களைக் குறித்து சிந்தித்துப்பார்த்தீரா?" என்றான்.
86. 'நான் இரவு முழுவதும் தொடர்ந்து அவர்களைக் கவனித்துக்கொண்டு வருகிறேன்" என்றார். ஓ, என்னே. "சிட்டுக் குருவியின் மேலும் அவருடைய கண் இருக்கிறது, அவர் என்னையும் கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன்." நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அவர், நான் தொடர்ந்து முழு இரவும் அர்களைக் கவனித்தேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, என்னே. அவர் மூன்று பேரைக் குறித்து அக்கறை உடையவராக இருந்திருந்தால், தொல்லையில் சிக்கியிருக்கிறவர்களாக, ஒரு இரவில், இங்கே அமர்ந்திருக்கிற ஆயிரக்கணக்கானவர்களைக் குறித்து என்ன? நிச்சயமாக, அவர் கரிசனை உள்ளவராயிருக்கிறார்.
87. அவர், "நான் உங்கள் எல்லாரையும் போக விட்டிருப்பேன், ஆனால் என்னால் முடியாது, நானே போகிறேன். அது ஒரு பெரிய வேலை, எனவே நான் இறங்கிப் போகிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் தம்முடைய இருக்கையிலிருந்து எழுவதையும், அவருடைய ஆசாரிய வஸ்திரங்கள் அவரைச் சுற்றிலும் இருப்பதையும் (drop) என்னால் காண முடிகிறது. அவர் சுற்றிலும் பார்ப்பதை என்னால் காண முடிகிறது, இங்கே பின்னால் வடக்கில், அதோ ஒரு பெரிய திரள்கார்முகில் மேகம் (thunderhead) இருக்கிறது. அவர், "கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காற்றுகளே, இங்கே வாருங்கள்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
88. வானங்களிலுள்ள எல்லாமே அவருக்குக் கீழ்ப்படிகின்றன. அவருக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு அதிகம் தெரியும் என்று (நினைத்து), மனிதன் அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். வானங்கள் அவருக்குக் கீழ்ப்படிகின்றன. பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
89. "கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காற்றுகளே, இங்கே வாருங்கள். அதோ அங்கேயிருக்கிற அந்த திரள்கார்முகில் மேகத்தின் (thunderhead) கீழாக வாருங்கள். நான் இந்தக் காலையில், ஒரு பிரயாணம் செய்ய விரும்புகிறேன். அவைகள் அங்கு போவதையும், அந்தப் பெரிய திரள்கார்முகில் மேகத்தின் (thunderhead) கீழாக சுழலுவதையும் (roll), கீழே நெடுகிலும் இறங்கி வந்து, சிங்காசனத்திற்கு ஒரு பக்கமாக போவதையும் என்னால் காண முடிகிறது. அவர் தம்முடைய சிங்காசனத்தை விட்டு, அந்தப் பெரிய திரள்கார்முகில் மேகத்தில் அடியெடுத்து வைக்கிறார், அது ஒரு இரதத்தைப் போன்று இருந்தது, அவர் அதன்மேல் வந்து, அந்த நான்கு காற்றுகளையும் அங்கிருந்த மேகத்தோடு பூட்டி, ஒரு இரதத்தைப் போன்று பிரயாணம் செய்து, வானங்களிலுள்ள வளைந்து வளைந்து செல்லும் மின்னலைப் பிடித்து, அதை இடிக்கும்படி செய்கிறார் (crack). அல்லேலூயா!
90. இன்னும் ஒரு அடிதான், அப்போது எபிரெய பிள்ளைகள் அக்கினிச்சூளையில் இருப்பார்கள். அவரோ ஜீவக்கடல் பக்கமாக கடந்து சென்று, ஜீவக்கடலிலிருந்த ஒரு பனையைப் பறித்துக்கொண்டார். அவர்கள் தங்களுடைய கடைசி- கடைசி அடியை எடுத்து வைத்தபோது, அதோ அவர் அக்கினிச்சூளையில் ஒரு விசிறியோடு தோன்றி, காற்று வீசிக் கொண்டிருந்தார்.
91. "எபிரெய பிள்ளைகளே, நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?"
92. அவன், "அவர் அங்கே நின்று கொண்டிருந்த போது, அவர் எனக்கு தேவ குமாரனைப் போன்று காணப்பட்டார்" என்று சொன்னான். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். "தேவ குமாரனைப் போன்ற ஒருவர்.
93. நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
94. நான், "ஏசாயா, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" என்று கேட்கிறேன். (வேறொரு தீர்க்கதரிசி.) "நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ ஒரு பெரிய தீர்க்கதரிசி ஆயிற்றே."
95. அவன், அவர் ஆலோசகர், சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், கொடுக்கப்பட்டார்: கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்;" என்று சொன்னான், ஓ! அவருடைய இராஜ்யத்திற்கு முடிவிராது."
96. நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்? அவர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கவில்லையா?
97. நான், தானியேலே, நீ ஒருநாள் அங்கே நின்று கொண்டிருந்தாயே. நீ தேவ குமாரனைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறாய்? அவர் கிறிஸ்துவாக இருந்தாரா? நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" என்று கேட்கிறேன்.
98. அவன், "சகோதரன் பிரன்ஹாமே, ஒருநாள், நான் காலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று கூறியிருப்பான், அல்லேலூயா! "ஒரு தரிசனத்தில் தேவன் அவைகளை என் பக்கமாக கடந்து செல்லும்படி செய்து கொண்டிக்கையில், நான் காலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்து போய்க் கொண்டிருந்த காலங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இராஜாக்கள் எல்லாரும் வருவதையும், மகத்தான இராஜ்யங்களையும் மற்றவைகளையும் நான் கண்டேன். அதன்பிறகு, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல், பெயர்ந்து, பாபிலோனுக்குள் உருண்டு வந்து, கீழே ஓடி, அது ஒரு மகத்தான பர்வதமாக ஆகி, பூமி முழுவதையும் நிரப்புவது மட்டுமாக நான் பார்த்தேன். அதுதான் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருந்தது" என்று சொல்லியிருப்பான். அல்லேலூயா! தானியேல்.
99. நாம் யோவான் ஸ்நானகனைக் கேட்டுப் பார்ப்போம்... இயேசு, அவன் தீர்க்கதரிசிகள் எல்லாரிலும் பெரியவனாயிருக்கிறான்" என்று சொன்னார். "யோவானே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" யோவான் அங்கே நின்று கொண்டிருந்த போது, அவனைப் பாருங்கள். இயேசு, "ஸ்திரீயிடம் பிறந்தவர்களில், யோவானைப் பார்க்கிலும் மகத்தானவன் ஒருபோதும் இருந்ததில்லை" என்று இயேசு கூறியிருக்கிறார். "நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ சரியாக அங்கேயிருந்தாயே. நீ அவருடைய இரண்டாவது cousin-ஆக இருந்தாயே. நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
100. அவன் கூறுவது இதோ இருக்கிறது: "எனக்கு அவரைத் தெரியாது: ஆனால் அவர், வனாந்தரத்தில், ஆவியானவர் வந்து யார்மேல் இறங்கி, தங்குவதை நீ காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்: தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது' என்று சொன்னார்" என்று.
101. "யோவானே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
102. நாம் வேறொரு சாட்சியை அழைப்போம். எப்பொழுதும் ஜீவித்ததிலேயே, அவருடைய தாயாரைக் காட்டிலும் சிறந்த சாட்சி இருக்கிறார்கள் என்று நான் நம்பவில்லை . அது சரியே. 'மரியாளே, அவரை இங்கே கொண்டு வந்தவள் நீதான்." நாம் கன்னி மரியாளைக் கேட்டுப் பார்ப்போம், 'மரியாளே, அவர் யாருடைய குமாரன், உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீ அவருடைய தாயார் ஆயிற்றே"
103. அதற்கு அவள், "நான் ஒரு மனுஷனையும் அறிந்திருக்கவில்லை" என்று கூறினாள். அல்லேலூயா! ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்மேல் நிழலிட்டு, அந்தப் பரிசுத்த காரியம் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்' என்று சொன்னார். நான் தேவனுடைய குமாரனை விசுவாசிக்கிறேன். நீங்களுடைய இல்லையா? ஆம், ஐயா. அவர் யாருடைய குமாரன்?
104. அவருடைய பக்கவாட்டை துளைத்து, அவருடைய இரத்தம் வந்து பாய்வதைக் கண்ட அந்த ரோம போர்ச்சேவகனைக் கேட்டுப் பார்ப்போம். "நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
105. அவன், "நிச்சயமாகவே, அவர் தேவனுடைய குமாரன்" என்று சொன்னான்.
106. நாம் அவருடைய சத்துருவாகிய யூதாஸைக் குறித்து சிந்திப்போம். அவருடைய சத்துரு என்ன கூறினான் என்று பார்ப்போம். "யூதாஸே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
107. "ஓ" அவன், "குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து (betrayed) விட்டேனே. நான் நான்று கொள்ளும்படியாக, எனக்கு ஒரு கயிற்றைக் கொடுங்கள்; காய்பாவே, இதோ உன்னுடைய பணம். நான் குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன்" என்று சொன்னான்.
108. நாம் அந்த மகத்தான சட்ட நிபுணனாக (lawyer) இருந்த பிலாத்துவைப் பார்க்கலாம், அவன் அந்நாளின் ஒரு மகத்தான மனிதனாக, அதிகாரப்பூர்வமாக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஒருவனாக இருந்தான். நாம் அவனிடம் கேட்டுப் பார்ப்போம், "பிலாத்துவே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ நரகத்தை விட்டு வெளியே வந்து, இங்கே எழுந்து நிற்பாயா?"
109. நீங்கள், அவன் நரகத்திலா இருந்தான்?" என்று கேட்கலாம்.
110. நிச்சயமாக அவன் அங்கு தான் இருந்தான். அவன் இன்னும் அங்கே தான் இருக்கிறான்.
111. "நீங்கள் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்கலாம்.
112. நான் அவனை நியாயத்தீர்க்கவில்லை , ஆனால் அவனுடைய கனிகளினாலே அவன் அறியப்படுகிறான். சரி.
113. "அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் பிலாத்துவே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?"
114. அவன், "ஓ, ஒருநாள் நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன்:'நான் அவரிடத்தில் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை'' என்று சொன்னான்.
115. நாம் பார்ப்போம். நாம் அப்படியே ஒருநிமிடம் காட்சியைத் திருப்புவோம். அவன் அங்கே நின்றுகொண்டு, பார்த்துக்கொண்டு, சுற்றும் முற்றும் நோக்கிப்பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் அப்படியே காண முடிகிறது, கோபத்தால் நிறைந்த அவனுடைய கண்கள் அவரை நோக்கிப் பார்த்துக்கொண்டு, அவரில் ஏதாகிலும் தவற்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அப்படியானால் தான் சீசரிடமும் (Caesar) மற்றவர்களிடமும் கொஞ்சம் தயவைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தான்.
116. அப்போது ஒரு குதிரை வருகிற சத்தத்தைக் கேட்கிறேன். இதைக் கவனியுங்கள். அது எவ்வளவு வேகமாக வர முடியுமோ அவ்வளவு வேகமாக சாலையில் வந்து கொண்டிருக்கிறது. அது என்ன? அது தேவாலய காவலாளிகளில் ஒருவன். அவன் அதைவிட்டு குதித்து, இறங்கி, மேலே பிலாத்துவுக்கு முன்னால் ஓடிப்போய், தலைவணங்கி, அவனிடம் ஒரு குறிப்பைக் கொடுக்கிறான். நாம் பார்ப்போம். பிலாத்துவும் அந்தக் குறிப்பை திறந்து, அதை வாசிக்கத் தொடங்குகிறான். உடனே, அவனுடைய முகம் வெளிறிப்போயிற்று, அவனுடைய கண்கள் நிலைத்து நின்றன, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்டன (buckle). விஷயம் தான் என்ன? நாம் அவனுடைய தோள் மேலாக நோக்கி, அது என்னவென்று பார்ப்போம்.
117. அது அவனுடைய மனைவியிடமிருந்து வந்திருந்தது. "என் அன்புக்குரிய கணவனாரே" அவள் ஒரு அஞ்ஞானியாக (heathen) இருந்தாள், அவள், "என் அன்புக்குரிய கணவரே, இந்த நீதிமானுக்கு எதுவும் செய்துவிடாதீர்கள்: நான் இன்று சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன்" என்று எழுதியிருந்தாள். அவனுடைய முகம் வெளிறிப்போய் விட்டது, அவனுடைய எலும்புகள் பொருத்தைவிட்டு வெளியே போய்விட்டது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, அவன் ஆணைகளைப் பிறப்பிக்கும் மகத்தானவனாக இருந்தான். "பிலாத்துவே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" |
118. "நான் என்னுடைய கைகளைக் கழுவினேன்."
119. "இல்லை , உன்னால் ஒருபோதும் கழுவ முடியாது. அவர் இன்னும் உன்னுடைய கைகளில் இருக்கிறார்."
120. இந்தப் பிற்பகலில், இயேசு கிறிஸ்துவைக் குறித்த செய்தியைக் கேட்கிற ஒவ்வொரு மனிதனுடைய கரங்களிலும் இருக்கிறார். அது சரியே.
121. ஓ, என்னே. நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்? ஏன், பிறப்பில், அவருடைய பிறப்பில், அவர் அற்புதமானவராக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவருடைய பிறப்பில், அவர் அற்புதமானவராக இருந்தார். ஞானத்தில், இந்த மனிதர் பேசுவதைப் போன்று பேசின ஒரு மனிதனும் ஒருக்காலும் இருந்ததில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பலியில் பார்த்தால், அவர் பரிபூரணராக இருந்தார்; மரணத்தில், அவர் மீட்பராக இருந்தார். அவர் உயிர்த்தெழுந்தபோது, அவர் தேவனாக இருந்தார் என்பதை நிரூபித்தார். அல்லேலூயா! அது சரியே. அவர் அவ்வாறு இருந்ததாகக் கூறினார். அவர் இங்கே பூமியின் மேல் இருந்தபோது, அவர், தான் தேவன் என்று கூறினார். அவர் தேவனைப் போன்றே காணப்பட்டார். அவர் தேவனைப் போன்றே நடந்துகொள்கிறார். அவர் தேவனைப் போலவே பிரசங்கம் பண்ணினார். அவர் தேவனைப் போன்றே உயிர்த்தெழுந்தார். அவர் தேவனாக இருந்தார். அல்லேலூயா! இம்மானுவேல் மாம்சத்தில் திரைமறைக்கப்பட்டிருந்து, மனிதர் மத்தியில் நடந்து சென்றார். அவர் தேவனாக இருந்தார், இம்மானுவேல். அவர் பிதாவை நிறைவேற்றினார். அவர் அந்த கவிஞர்களின் இருதயங்களையும், காலங்கள் தோறும் வந்த மகத்தான மனிதர்களின் இருதயங்களையும் சிலிர்ப்பூட்டினார். எப்பொழுதாவது அற்பமாக புறக்கணிக்கத்தக்கவனாக எண்ணப்பட்ட ஒவ்வொரு மனிதனும், தேவ குமாரனாகிய அவர்மேல் தங்கள் நம்பிக்கை வைத்திருந்த யாரோ ஒருவனாகத்தான் இருந்தான்.
122. ஒருமுறை, ஸ்டோன்வால் ஜாக்சன் அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது, "இந்த அற்பமான ஒருகூட்ட மனிதர்களை வைத்துக் கொண்டு உம்மால் எவ்வாறு நிற்க முடிகிறது?" என்று. மேலும், "அவ்வளவு பெரிய எதிர்ப்புகள் மத்தியில், உம்மால் எவ்வாறு அவ்விதமாக நிற்க முடிகிறது?" என்று கேட்கப்பட்டது. அவர் தம்முடைய காலணியை தரையில் உதைத்து, அதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லாமல், ஒரு குவளை தண்ணீராகிலும் ஒருபோதும் என் வாய்க்குள்ளே போகாது. அதுதான் காரணம்" என்றாராம்.
123. ஃபோர்ஜ் பள்ளத்தாக்கில், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள் முழங்கால் படியிடுவதற்கு முன்பாக.
124. அத்தகைய வெவ்வேறானவர்களை உங்களுக்குத் தெரியும்.
125. நாம் அந்த கவிஞனைக் கேட்டுப் பார்ப்போம். "நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?" அவர் அந்த கவிஞர்களின் இருதயங்களை சிலிர்ப்பூட்டியிருந்தார். நாம் இன்றைக்கு , எட்டி நியூட்டன் அவர்களே, நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நியூட்டன் அவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டுப் பார்க்கலாம். அவர் ஒருநாள் அறைக்குள் இருந்தபோது, உள்ளூக்கம் அவரிடம் வந்தது. "நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று பார்ப்போம்."
126. அவர் பேனாவை எடுத்து, இவ்வாறு எழுதினார்: ஆச்சரியமான கிருபை! அதன் தொனி எவ்வளவு இனிது, அது என்னைப் போன்ற ஈனனை இரட்சித்ததே! நான் ஒருகாலத்தில் இழக்கப்பட்டிருந்தேன், ஆனால் இப்பொழுதோ கண்டுபிடிக்கப்பட்டேன், குருடாக இருந்தேன்...